×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தெப்பம் கட்டும் பணி

மன்னார்குடி : மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆனி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிரமாண்ட தெப்பம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனித் தெப்ப திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ெதப்பஉற்சவம் வரும் 13ம்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பெருமாள் ருக்மணி, சத்ய பாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பிரசித்திப்பெற்ற ஆனித் தெப்ப திருவிழா 23 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ள ஹரித்திராநதி என்றழைக்கப்படும் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.  இதற்காக தெப்பம் கட்டும் பணிகள் கோயில் செயல்அலுவலர் மாதவன் வழிகாட்டுதலின்பேரில் தங்க குமரேசன் தலைமையில் நேற்றுமுன்தினம் துவங்கியது. சுமார் 50 அடி நீளம், 50 அடி அகலத்தில் 500 காலி தகர பேரல்களுடன் அடித்தளம் அமைக்கப்படுகிறது. மேலும், 43 அடி உயரத்துடன் 27 அடி சுற்றளவு கொண்ட 11 டன் எடையுள்ள தெப்பம் அமைக்கப்படுகிறது….

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தெப்பம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Mannargudi Rajagopala Swami Temple ,Ani Theppa Utsavam ,Mannargudi ,Mannargudi Rajagopalaswamy ,Mannargudi Rajagopala Swamy Temple ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!